புதுடெல்லி: கூட்டுறவு, ரயில்வே உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. அதன் படி, தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்திற்கு (என்சிடிசி) நான்கு ஆண்டுகளுக்கு ரூ.2,000 கோடி மானிய உதவி வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கடன் வழங்கல் நடவடிக்கைகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 29 கோடி உறுப்பினர்களைக் கொண்ட 8.25 லட்சத்துக்கும் அதிகமான கூட்டுறவுகளுக்கு என்சிடிசி கடன்களை வழங்குகிறது.
இதில் உள்ள மொத்த உறுப்பினர்களில் 94 சதவீதம் பேர் விவசாயிகள். இதேபோன்று, உணவு பதப்படுத்தும் துறையை மேம்படுத்துவதற்கான முதன்மை திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா (பிஎம்கேஎஸ்ஒய்) பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அமைச்சரவை ரூ.1,920 கோடி அதிகரித்து ரூ.6,520 கோடியாக உயர்த்தியுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் சுமார் ரூ.11,169 கோடி மதிப்பிலான நான்கு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம், 6 மாநிலங்களில் 13 மாவட்டங்களை உள்ளடக்கிய நான்கு மல்டி டிராக் ரயில் திட்டங்கள்
செயல்படுத்தப்பட உள்ளன.