புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை மொத்தம் 12 எம்.பி.க்கள் புறக்கணித்தனர். டெல்லி நாடாளுமன்றக் கட்டிடத்தில் நேற்று காலை 10 மணிக்கு குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
ஒடிசாவின் முன்னாள் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ஆகிய கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன.
பிஜு ஜனதா தளம் கட்சிக்கு மாநிலங்களவையில் நிரஞ்சன் பிஷி, சுலாட்டா தியோ, முசிபுலா கான், சுபாசிஷ் குந்தியா, மனாஸ் ரஞ்சன் மங்கராஜ், சாஸ்மித் பத்ரா, தேவசிஷ் சமந்தாரே ஆகிய 7 எம்.பி.க்களும், பிஆர்எஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் தாமோதர் ராவ் திவகொண்ட ரெட்டி, பி.பார்த்தசாரதி ரெட்டி, கே.ஆர்.சுரேஷ் ரெட்டி, ரவிசந்திர வட்டிராஜு ஆகிய 4 எம்.பி.க்களும் உள்ளனர்.
அவர்கள் யாருமே வாக்களிக்கவில்லை. அதேபோல், ஷிரோமணி அகாலி தளம் ார்பில் எம்.பி.யான ஹர்சிம்ரத் கவுர் பாதலும் வாக்களிக்கவில்லை. மொத்தம் 12 எம்.பி.க்கள் இந்த தேர்தலைப் புறக்கணித்தனர்.