புதுடெல்லி: பாலஸ்தீனத்தின் காசாவில் செய்தியாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேல் அரசு இனப்படுகொலை செய்து வரும் நிலையில் இந்திய அரசு மவுனமாக நிற்பது வெட்கக்கேடானது என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகக் கண்டித்திருந்தார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் கருத்தும் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் பிரியங்காவின் கருத்துகளுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் தூதர் ரியூவென் அஸார் கூறும்போது, ‘‘ஹமாஸின் புள்ளிவிவரங்களை நம்ப வேண்டாம். உங்கள் ஏமாற்று வேலைதான் வெட்கக்கேடானது.
இஸ்ரேல் 25,000 ஹமாஸ் தீவிரவாதிகளை கொன்றது. இந்த மனித உயிரிழப்புகளுக்கான பயங்கரமான செலவு, ஹமாஸின் கேவலமான தந்திரங்களான பொதுமக்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது, வெளியேற அல்லது உதவி பெற முயலும் மக்களைச் சுடுவது, அவர்களது ராக்கெட் தாக்குதல்கள் ஆகியவற்றில் இருந்து வருகிறது. அங்கே இனப்படுகொலை நடக்கவில்லை” என்றார்.