பெங்களூரு: உடல்நலக்குறைவு காரணமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (83) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்களில் வெளியான தகவல்களின்படி, “மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) காய்ச்சல் ஏற்பட்டு கால் வலி இருப்பதாக சொல்லப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் தற்போது நலமாக உள்ளார், மருத்துவர்கள் தொடர்ந்து அவரின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சையளித்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.