புதுடெல்லி: இந்தியாவில் சமூக பாதுகாப்பு திட்டங்களால் பயனடைவோர் 10 ஆண்டில் 19-லிருந்து 64.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. ‘நீடித்த வளர்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) – நேஷனல் இண்டிகேட்டர் பிரேம்வொர்க் முன்னேற்ற அறிக்கை 2025’ என்பது இந்தியாவின் வளர்ச்சி குறித்த தரவு சார்ந்த ஆதாரங்களை வழங்குகிறது.
புள்ளியியல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், வறுமையில் வாடும் அனைத்து வயது ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் விகிதம் 2019-21-ல் 14.96% ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக வங்கி அறிக்கையில், இந்தியாவில் தீவிர வறுமை 2011-12-ல் 27.1% ஆக இருந்ததாகவும் இது 2022-23-ல் 5.3% ஆக குறைந்துவிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.