புதுடெல்லி: மக்களவையில் நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 2024-25-ம் நிதியாண்டில் 2.17 லட்சம் எண்ணிக்கையிலான பல்வேறு மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் கண்டறியப்பட்டன. இது முந்தைய ஆண்டு எண்ணிக்கையான 2.23 லட்சத்தை விட குறைவாகும்.
இந்த 2.17 லட்சம் கள்ள நோட்டுகளில் 1,17,722 நோட்டுகள் ரூ.500 ஆகும். இதையடுத்து 51,069 நோட்டுகள் ரூ.100 மதிப்பும், 32,660 நோட்டுகள் ரூ.200 மதிப்பும் கொண்டதாகும். இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.