லக்னோ: உ.பி. தலைநகர் லக்னோவில் தூய்மை கங்கை மற்றும் கிராமப்புற நீர் வழங்கல் துறையின் மறு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை வகித்துப் பேசியதாவது:
உ.பி.யில் 1.28 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறும் வகையில் பருவகால ஆறுகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே 6,448 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
மாநிலத்தில் தடுப்பணைகள், குளங்கள் கட்டுவதையும் அவற்றை மீட்டெடுப்பதையும் ஒரு வெகுஜன இயக்கமாக அதிகாரிகள் மாற்ற வேண்டும். மக்களின் கூட்டுப் பங்கேற்பு மூலம் இவை பெரிய அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.