லக்னோ: உ.பி.யில் பறவைக் காய்ச்சல் அபாயம் இருப்பதால் மாநிலத்தின் அனைத்து துறைகளும் அதிகாரிகளும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை மேற்கொள்ள முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அனைத்து உயிரியல் பூங்காக்கள், பறவைகள் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், சதுப்பு நிலங்கள் மற்றும் பசு காப்பகங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
இந்த வளாகங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் அனைத்து விலங்குகள், பறவைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.