புதுடெல்லி: நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ள பல்ராம்பூரில் உள்ள ரெஹ்ரா மாபி கிராமத்தை சேர்ந்தவர் சங்கூர் பாபா என்று அழைக்கப்படும் ஜமாலுதீன். இவர், மதமாற்ற கும்பலுக்கு மூளையாக செயல்பட்டதையடுத்து இவருக்கு வெளிநாடுகளிலிருந்து பல கோடி ரூபாய் நிதி உதவி கிடைத்தது.
பட்டியல் சாதியினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள நபர்களை குறிவைத்து சட்டவிரோத மதமாற்ற நடவடிக்கையில் சிங்கூர் பாபா ஈடுபட்டதையடுத்து அவர் லக்னோவில் உள்ள ஒரு ஹோட்டலில் நீத்து என்கிற நஸ்ரின் என்ற பெண்ணுடன் ஜூலை 5-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
சிங்கூர் பாபா உள்ளிட்டோர் மீது ஏடிஎஸ் வழக்கு பதிவு செய்தது. சில நாட்களுக்கு முன்பு ஏடிஎப் நடத்திய சோதனையில் சிங்கூர் பாபாவிடம் இருந்து முக்கிய டைரி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் 2022-ல் நடைபெற்ற உ.பி. தேர்தலின்போது பாபாவிடம் இருந்து பணம் பெற்ற பல அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த, 2022 தேர்தலுக்கான உத்ரவுலா தொகுதியின் முன்னாள் வேட்பாளர் ஒருவருக்கு ரூ.90 லட்சம் பணம் கொடுக்கப்பட்டதாக சிங்கூர் பாபா டைரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.