புனே: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டன் நிகழ்ச்சியில் பேசும்போது, “ஒரு முறை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு முஸ்லிமை தாக்கினோம். அது மகிழ்ச்சியாக இருந்தது என சாவர்க்கர் நூலில் குறிப்பிட்டுள்ளார்” என்றார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாவர்க்கர் வம்சாவளியைச் சேர்ந்த சத்யாகி சாவர்க்கர் ராகுல் காந்தி மீது புனே நகரில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், “மனுதாரர் நாதுராம் கோட்சேவின் வம்சாவளி ஆவார். எனவே மனுதாரரால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கூறி புனே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.