சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சமீபத்திய மழையால் ஏற்பட்ட சேதம் காரணமாக 3 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட577 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
மூடப்பட்ட 577 சாலைகளில் அதிகபட்சமாக குலுவில் 213 சாலைகளும், மண்டி மாவட்டத்தில் 154 சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் கூறுகையில், “இமாச்சலில் சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக 812 மின்மாற்றிகள் சேதம் அடைந்துள்ளன.
369 நீர் விநியோக திட்டங்கள் தடைபட்டுள்ளன. ஜூன் 20-ம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 380 பேர் இறந்துள்ளனர். 40 பேரை காணவில்லை. மாநிலம் ரூ.4,306 கோடி இழப்பை சந்தித்துள்ளது” என்று தெரிவித்தனர்.