Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது: பிரதமர் பேச்சு
    தேசியம்

    இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது: பிரதமர் பேச்சு

    adminBy adminJune 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது: பிரதமர் பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் நோயான டிராக்கோமா இல்லாத நாடாக அறிவித்துள்ளது என்று ‘மன் கி பாத்’ உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    மாதம்தோறும் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்களுடன் வானொலி வழியாக உரையாடி வருகிறார். இன்று இந்த நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் நோயான டிராக்கோமா இல்லாத நாடாக அறிவித்துள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது நமது சுகாதார ஊழியர்களின் வெற்றி. ‘ஜல் ஜீவன்’ மிஷன் இதற்கு பங்களித்துள்ளது.

    ஜெனீவாவில் நடந்த 78-வது உலக சுகாதார மாநாட்டில், உலக சுகாதார அமைப்பால் (WHO) பொது சுகாதாரப் பிரச்சினையாக டிராக்கோமாவை நீக்குவதற்கான சான்றிதழ் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில், இந்திய அரசு டிராக்கோமாவை பொது சுகாதாரப் பிரச்சினையாக நீக்கியதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

    தென்கிழக்கு ஆசியாவில் இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது நாடாகவும் இந்தியா உருவாகியுள்ளது. டிராக்கோமாவை ஒழிப்பதற்காக பார்வையிழப்பு மற்றும் பார்வைக் குறைபாட்டை (NPCBVI) கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் கீழ் நமது அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.” என்றார்.

    மேலும். “கடந்த ஜூன் 21 அன்று, நம் நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். இந்த கொண்டாட்டங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. 10 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் நமது பாரம்பரியம் முன்பை விட பிரமாண்டமாக மாறியுள்ளது. மிக அதிகமான மக்கள் தங்கள் வாழ்க்கையில் யோகாவை இணைத்துக்கொள்வதை இது குறிக்கிறது” என்றார்

    தொடர்ந்து பேசிய அவர், “ நீண்ட காலத்திற்குப் பிறகு கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்குகிறது. இது பக்தர்களுக்கு சிறந்த தருணமாகும். ஜூலை 3 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளது. இந்த யாத்திரைகளில் ஈடுபடவிருப்பவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.” என்று கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்

    June 29, 2025
    தேசியம்

    புரி நெரிசல் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

    June 29, 2025
    தேசியம்

    உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு: 9 தொழிலாளர்களின் நிலை என்ன?

    June 29, 2025
    தேசியம்

    புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்: 3 பேர் பலி; காயம் 50 – முதல்வர் மாஞ்சி மன்னிப்பு

    June 29, 2025
    தேசியம்

    தற்கொலைப் படைத் தாக்குதல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

    June 29, 2025
    தேசியம்

    ‘விண்வெளியில் இருந்து இந்தியாவை பார்க்கும்போது…’ – பிரதமர் மோடியுடன் சுக்லா பேசியது என்ன?

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஃபேஸ்புக் பயனர்கள் கவனத்துக்கு: போனில் உள்ள போட்டோக்களை ஸ்கேன் செய்யும் மெட்டா ஏஐ?
    • ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ ஆக.1-ல் ரிலீஸ்! – படக்குழு அறிவிப்பு
    • திருப்புவனம் காவல் நிலையத்தில் கோயில் காவலாளி மரணம்: திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
    • ஷெபாலி ஜாரிவாலா மரணம்: வெறும் வயிற்றில் மருந்து எடுத்துக்கொள்வது ஆபத்தானது? நிபுணர்கள் ஏன் அதற்கு எதிராக அறிவுறுத்துகிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ – கல்யாண் பானர்ஜி விமர்சனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.