Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவர்…” – அமித் ஷா பேச்சு
    தேசியம்

    “இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவர்…” – அமித் ஷா பேச்சு

    adminBy adminJune 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவர்…” – அமித் ஷா பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: “நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    ஐஏஎஸ் அதிகாரி ஆசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவின் அடையாளத்துக்கு தாய்மொழிகள் முக்கியமானவை. வெளிநாட்டு மொழிகளை விட அவை முன்னுரிமை பெற வேண்டும். இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை.

    நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் ஆபரணங்கள் என்று நான் நம்புகிறேன். நமது மொழிகள் இல்லாவிட்டால் நாம் இந்தியர்களாக இருக்க முடியாது. வெளிநாட்டு மொழிகளைக் கொண்டு இந்தியாவை நாம் கற்பனைகூட செய்ய முடியாது. இந்தியாவின் மொழி பாரம்பரியத்தை மீட்டெடுக்க நாடு முழுவதும் புது முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். காலனித்துவ அடிமைத்தனத்தின் அடையாளமாக உள்ள ஆங்கிலம் உலகம் முழுவதும் வெறுக்கப்படும். நமது நாடு, நமது கலாச்சாரம், நமது வரலாறு மற்றும் நமது மதத்தைப் புரிந்துகொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. அரைகுறையான அந்நிய மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது.

    இந்தப் போர் எவ்வளவு கடினமானது என்பதை நான் முழுமையாக அறிவேன். ஆனால் இந்திய சமூகம் அதில் வெற்றி பெறும் என்றும் நான் முழுமையாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை, சுயமரியாதையுடன், நமது சொந்த மொழிகளில் நமது நாட்டை நடத்துவோம், சித்தாந்தம் செய்வோம், ஆராய்ச்சி செய்வோம், முடிவுகளை எடுப்போம், உலகையும் வழிநடத்துவோம். இதில் யாரும் சந்தேகப்படத் தேவையில்லை. 2047-ஆம் ஆண்டில் உலகின் உச்சியில் இருப்பதற்கு நமது மொழிகள் பெரிதும் பங்களிக்கும்.

    நாடு இருளில் மூழ்கியிருந்தபோது, ​​நமது மதம், சுதந்திரம் மற்றும் கலாச்சாரத்தின் விளக்குகளை இலக்கியம் ஏற்றி வைத்தது. நமது மதம், கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தை யாரெல்லாம் தொட முயன்றார்களோ அவர்களை ​​நமது சமூகம் எதிர்த்து நின்று தோற்கடித்தது. இலக்கியம் நமது சமூகத்தின் ஆன்மா. மாற்றம் ஒரு மக்கள் இயக்கமாக மாறும்போது, ​​அது ஒரு புரட்சியாக மாறுகிறது. இன்று, இந்த மாற்றத்தை நம் நாட்டில் காணலாம். மாற்றத்துக்கான நமது இந்த பயணம் 2047-ஆம் ஆண்டுக்குள் நமது நாட்டின் பெருமையை மீண்டும் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன்” என்று அமித் ஷா பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    முதல் கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் 1 முதல் தொடக்கம்

    June 30, 2025
    தேசியம்

    ஒடிசாவின் புரி ரதயாத்திரை கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள்  உயிரிழப்பு

    June 30, 2025
    தேசியம்

    கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: முக்கிய குற்றவாளி மனோஜித் ஒரு சைக்கோ என குற்றச்சாட்டு

    June 30, 2025
    தேசியம்

    மாணவ, மாணவியரின் உடல்நலன், மனநலனை மேம்படுத்த கடும் எதிர்ப்பை மீறி கேரள பள்ளிகளில் ஜும்பா நடன பயிற்சி

    June 30, 2025
    தேசியம்

    ஹரியானாவில் முன்னாள் காங். எம்எல்ஏ-வின் ரூ.557 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

    June 30, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா இழந்த விமானம் குறித்து காங்கிரஸ் மீண்டும் கேள்வி

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • Prepieabeades: வாரத்திற்கு 150 நிமிட உடற்பயிற்சி ப்ரீடியாபயாட்டீஸை மாற்றியமைக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிக் பேங் முதல் பிரகாசமான கருந்துளை குண்டுவெடிப்புகளை நாசா கவனிக்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கல்விக்கு உதவும் ‘சமூக வலைதளம்’
    • அமித் ஷா குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம்
    • மறைந்த இளவரசி டயானா ஒருபோதும் கையுறைகளை அணியவில்லை என்பதற்கான தொடுகின்ற காரணம் – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.