Last Updated : 11 Aug, 2025 07:11 AM
Published : 11 Aug 2025 07:11 AM
Last Updated : 11 Aug 2025 07:11 AM

புதுடெல்லி: எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றிய முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது: இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து உலகம் முழுவதும் அங்கீகாரத்தை பெற்று வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி சில நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. நமது வளர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
அஜீரணப் பிரச்சினையால் அவர்கள் அவதிப்படுகின்றனர். உலக பொருளாதாரத்தில் இந்தியா 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறி வருகிறது. விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பால் நம்நாடு நிச்சயம் மேலும் வளர்ச்சியடையும். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
FOLLOW US