ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 பாதுகாப்பு கவசத்தை வாங்க கடந்த 2018-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி ஐந்து எஸ்400 பாதுகாப்பு கவசங்களை ரஷ்யா வழங்க வேண்டும். இதுவரை மூன்று எஸ்400 பாதுகாப்பு கவசங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
இவை பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைப் பகுதிகளில் நிறுவப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள இரண்டு எஸ்400 பாதுகாப்பு கவசங்கள் அடுத்த ஆண்டில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் இடையே கடும் சண்டை நடைபெற்று வரும் நிலையில் இந்திய விமானப் படையின் எஸ்400 பாதுகாப்பு கவசங்கள் பாகிஸ்தான் ஏவுகணைகளை நடுவானில் துவம்சம் செய்து வருகின்றன. எஸ்400 வான் பாதுகாப்பு கவசத்தில் 91என்6இ ரக ரேடார் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த ரேடாரின் மூலம் 1,000 கி.மீ. தொலைவு வரை இலக்குகளை கண்காணிக்க முடியும். குறைவான தொலைவு (40 கி.மீ.) , நடுத்தர தொலைவு (120 கி.மீ), நீண்ட தொலைவு (250 கி.மீ.) , மிக மீண்ட தொலைவு (400 கி.மீ.) என 4 வகையான ஏவுகணைகள் எஸ்400 கவசத்தில் பொருத்தப்பட்டு உள்ளன.
மிக நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகள் 400 கி.மீ. தொலைவு வரையிலான வான் இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும். எனினும் 600 கி.மீ. தொலைவு வரைகூட இந்த ஏவுகணைகள் சீறிப் பாயும் திறன் கொண்டவை ஆகும். ஒரே நேரத்தில் 160 வான் இலக்குகளை எஸ்400 கவசத்தால் கண்காணிக்க முடியும். ஒரே நேரத்தில் 72 வான் இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்க முடியும்.

எஸ்400 தாக்கி அழிக்கும். குறிப்பாக 30 கி.மீ. உயரத்தில் பறக்கும் ட்ரோன்களையும்
நடுவானில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது.
இதன்படி போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை ஒரே நேரத்தில் எஸ்400 தாக்கி அழிக்கும். குறிப்பாக 30 கி.மீ. உயரத்தில் பறக்கும் ட்ரோன்களையும் நடுவானில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது. ஒரே ஏவுகணை மூலம் இரு இலக்குகளையும் தாக்கி அழிக்கும். எஸ்400 என்பது நடமாடும் வாகனங்களாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொகுப்பில் ரேடார், கட்டுப்பாட்டு அமைப்பு, ஏவுகணைக்கான ஏவுதளங்கள் என மொத்தம் 16 வாகனங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை எந்த இடத்துக்கும் எளிதாக கொண்டு செல்ல முடியும்.
கடந்த 8-ம் தேதி இந்தியாவின் காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகளை வீசியது. அனைத்து ஏவுகணைகளையும் எஸ்400 பாதுகாப்பு கவசத்தில் இருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணைகள் நடுவானிலேயே இடைமறித்து அழித்தன. பாகிஸ்தானின் ஓர் ஏவுகணைகூட இந்தியாவின் மீது விழவில்லை.
எஸ்400 வான் பாதுகாப்பு கவசத்துக்கு இந்திய விமானப்படைசுதர்சன சக்கரம் என்று பெயரிட்டு இருக்கிறது. இது இந்தியாவின் அசைக்க முடியாத பாதுகாப்பு அரணாக விளங்குகிறது.