நாக்பூர்: பிரம்ம குமாரிகள் விஸ்வ சாந்தி சரோவர் 7-வது நிறுவன தின விழா நாக்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று பேசுகையில், “இந்தியா வலிமை அடைந்தால் தங்களுக்கு என்ன நேரிடும், தங்கள் நிலை என்னவாகும் என்று உலகில் சிலர் பயப்படுகிறார்கள்.
அதனால்தான் இந்தியப் பொருட்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நாம் எதுவும் செய்யவில்லை. நீங்கள் 7 கடல்களுக்கு அப்பால் இருக்கும்போது எந்த தொடர்பும் இல்லாத போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்?” என்றார்.