ராயகடா: ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டம் கஞ்சமஜ்ஹிரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது சொந்த அத்தை மகனை (தந்தையின் சகோதரி மகன்) காதலித்து திருமணம் செய்துள்ளார். ஒடிசா வழக்கப்படி அத்தை மகன், மகளை திருமணம் செய்வது சமூக வழக்கத்துக்கு எதிரானது.
இதனால் அவர்களுக்கு தண்டனை வழங்க கிராமத்தினர் முடிவு செய்தனர். காதல் ஜோடியை வயலுக்கு அழைத்துச் சென்ற கிராமத்தினர், அவர்களை மாடு போல் ஏரில் பூட்டி நிலத்தை உழச் செய்தனர். அவர்களை ஒருவர் பிரம்பால் அடித்தபடி நிலத்தை உழச் செய்தார்.
அதன்பின் அவர்கள் கிராம கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாவத்தை போக்குவதற்கான சடங்குகளை செய்ய வைத்தனர். இந்த வீடியோ வைரலாக பரவியதால் கண்டனம் எழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. ஸ்வாதி குமார் விசாரணை நடத்தி வருகிறார். நூதன தண்டனை வழங்கிய கிராமத்தினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்யவுள்ளனர்.