புதுடெல்லி: அசாமில் கடந்த 2021-ம் ஆண்டு கால்நடை பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக கால்நடைகள் வெட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்கள், ஓட்டல்கள், பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சிக்கு முழு தடையும் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் பக்ரித் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது அசாம் மாநிலத்தில் பல இடங்களில் சட்டவிரோதமாக இறைச்சி கூடங்கள் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தை மீறி செயல்பட்டால் மதங்களுக்கு அப்பாற்பட்டு யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா எச்சரித்தார்.