‘சிதாரே ஜமீன் பர்’ படம் ஓடிடி வெளியீடு இல்லை என ஆமிர்கான் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆமிர்கான் நடிப்பில் வெளியான ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’ மற்றும் ‘லால் சிங் சதா’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவின. இதனால் மீண்டும் கம்பேக் வெற்றிக்காக காத்திருக்கிறார் ஆமிர்கான். அடுத்ததாக அவருடைய நடிப்பில் ‘சிதாரே ஜமீன் பர்’ படம் வெளியாகவுள்ளது.
இப்படம் ‘சாம்பியன்ஸ்’ என்ற ஸ்பெனிஷ் படத்தின் ரீமேக் ஆகும். ஜூன் 20-ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் ஓடிடி வெளியீடு இல்லை என ஆமிர்கான் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திரையரங்க வெளியீட்டில் இருந்து 8 வாரங்களுக்கு பிறகு யூடியூப் தளத்தில் Pay Per View முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார் ஆமிர்கான் என கூறப்படுகிறது.
இந்த முடிவினை இந்திய திரையுலகினர் பலரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் ஆமிர்கான், ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிதாரே ஜமீன் பர்’. ஆமிர்கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் இந்தியாவில் வெளியிடுகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.