அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘காத்தி’ (Ghaati) திரைப்படம் ஜூலை 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி’ திரைப்படத்துக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் ‘காத்தி’ தயாராகி வந்தது. முதலில் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், அப்படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை.
தற்போது சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் படம் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. ஜூலை 11-ம் தேதி ‘காத்தி’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்துக்கு நாகவல்லி வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ, அனுஷ்காவின் ஆக்ஷன் சம்பவமாக இந்தப் படம் இருக்கும் என்பதை உணர்த்தியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது ‘காத்தி’ திரைப்படம்.