‘யோகிடா’ படத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தங்கள் காதலை உறுதி செய்துள்ளனர் விஷாலும் – நடிகை சாய் தன்ஷிகாவும்.
நடிகர் சங்க கட்டிடம் முடிந்து, அதில்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார் விஷால். அவர் யாரை திருமணம் செய்யவுள்ளார் என்ற கேள்வியும் எழுந்தது.
நடிகை சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று தொடர்ந்து தகவல் பரவியது.
‘கபாலி’, ‘பேராண்மை’, ‘பரதேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் தன்ஷிகா.
சென்னையில் சாய் தன்ஷிகா நடித்த ‘யோகிடா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்.
மேடையில் பேசிய சாய் தன்ஷிகா விஷாலுக்கும் தனக்கும் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதை உறுதி செய்தார்.
இருவருக்கும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நிகழ்ச்சியில் இருவரது க்யூட்டான தருணங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.