பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் மோஹித் சூரி இயக்கியுள்ள காதல் திரைப்படம், ‘சையாரா’. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இதில் அஹான் பாண்டே ஹீரோவாக அறிமுகமாகிறார். அனீத் பட்டா கதாநாயகியாக நடிக்கிறார்.
விஜய் கங்குலி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் ஜூலை 18-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் ‘சையாரா’ என்ற தலைப்புப் பாடல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தின் பாடல்களை 5 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்ததாக மோஹித் சூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “புதிய இசையமைப்பாளர்கள், பாடகர்களைச் சந்திப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல புத்தகங்களைச் சேகரிக்க விரும்புபவர்களைப் போல மெல்லிசைகளையும் பாடல்களையும் சேகரிப்பதும் பிடிக்கும். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை 5 ஆண்டுகளுக்கும் மேலாக கவனமாக சேகரித்துத் தொகுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.