
தமிழில் ‘உன்னை சரணடைந்தேன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் மீரா வாசுதேவன். அடுத்து ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மீரா வாசுதேவன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வரும் அவர், கடந்த 2005ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் அசோக் குமார் மகன் விஷால் அகர்வாலைத் திருமணம் செய்து கொண்டார். 2010ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

