ரோபோ சங்கர் மறைவுக்கு பின், அவருடைய மகள் இந்திரஜா உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு முன்னணி நடிகர் ரோபோ சங்கர் உடல்நிலை மோசமாகி காலமானார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. மேலும், அவருடைய இறுதி ஊர்வலத்தில் மனைவி நடனமாடி வழியனுப்பி வைத்தது இணையத்தில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே தற்போது ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அப்பா நீங்கள் எங்களை விட்டுச் சென்று 3 நாட்கள் ஆகிறது. எங்களை நிறைய சிரிக்க வைத்ததுதும் நீ தான், இப்போது நிறைய அழ வைப்பதும் நீதான். இந்த மூன்று நாள் எனக்கு உலகமே தெரியவில்லை. நீ இல்லாமல் நம் குடும்பத்தை நாங்கள் எப்படி கொண்டு போக போகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் நீ எனக்கு சொல்லி கொடுத்தது போல் கண்டிப்பாக நான் வலிமையாக இருப்பேன் அப்பா.
தம்பி இந்த மூன்று நாட்களாக உன்னை ரொம்ப தேடுகிறான் அப்பா. கண்டிப்பாக நீ உனது நண்பர்கள் மற்றும் அண்ணன்களுடன் மேலே சந்தோஷமாகத் தான் இருப்பாய். நீ சொல்லி கொடுத்தது போன்று விமர்சனங்களுக்கு பயப்பட மாட்டேன் அப்பா. கண்டிப்பாக உன்னுடைய மகள் என்ற பெயரை காப்பாத்துவேன். உங்கள் பெருமைய உணர வைப்பேன் அப்பா. லவ் யூ அண்ட் மிஸ் யூ அப்பா.
உங்களுக்கும் எனக்கும் ரொம்ப பிடித்த போட்டோ இது. எல்லாருமே இந்த போட்டோவை பார்த்து நீ அப்படியே உங்க அப்பா ஜெராக்ஸ் என்று சொல்வார்கள். எப்போதுமே உங்களை போன்றே இருப்பேன் அப்பா” என்று தெரிவித்துள்ளார் இந்திரஜா சங்கர்.