சசிகுமாரின் ‘சுந்தரபாண்டியன்’, சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தர்மதுரை, ‘றெக்க’, ‘ஜகமே தந்திரம்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் சவுந்தரராஜா. நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக ‘மண்ணுக்கும் மக்களுக்கும்’ என்ற சமூகநல அறக்கட்டளையைத் தொடங்கி, நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம், அடுத்த 6 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் திட்டமிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் தொடக்கமாக சென்னை ஆவடியில் உள்ள போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடிகர் சவுந்தர ராஜா தலைமையில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. கடந்த 9 ஆண்டுகளில் 45,000 மரக்கன்றுகளை வளர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.