விஷ்ணு விஷால் – ஜுவலா கட்டா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை புகைப்படத்துடன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பெண் குழந்தை பிறந்திருப்பது குறித்து விஷ்ணு விஷால், “எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது ஆர்யன் அண்ணனாகிவிட்டார். இன்று எங்களுக்கு 4-வது திருமண நாளாகும். அதே நாளில் இந்த பரிசை நாங்கள் வரவேற்கிறோம். உங்கள் அனைவரின் அன்பும், ஆசீர்வாதமும் தேவை” என்று தெரிவித்துள்ளார்.
முதல் மனைவி ரஜினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால். இருவருக்கும் ஆர்யன் என்ற பெயரில் மகன் இருப்பது நினைவுக் கூரத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஜுவலா கட்டாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் விஷ்ணு விஷால்
We are blessed with a BABY GIRL..
Aryan is an elder brother now…Its our 4th wedding anniversary today…
On the same day we welcome this gift from the Almighty…Need all your love and blessings….@Guttajwala pic.twitter.com/vSAPVMXKN8
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) April 22, 2025