கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி, ஜீவிதா நடிப்பில் உருவான ‘அடியே வெள்ளழகி’ என்ற பாடலை 100-க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் கே.சி.பிரபாத்தின் மகனான மிதுன் சக்கரவர்த்தி, ‘கொடி வீரன்’ படத்தில் சிறுவனாக அறிமுகமானவர். தொடர்ந்து, பில்லா பாண்டி, கருப்புபெட்டி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார்.
கட்டெறும்பு சேனலில் வெளியாகியுள்ள இந்தப் பாடலை ஸ்டாலின் தயாரித்துள்ளார். முகமது இம்தியாஸ் இயக்கியுள்ளார். இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், சற்குணம், மோகன் ஜி, சரவண சக்தி, திருமலை, மஞ்சு திவாகர், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், எழுத்தாளரும் நடிகருமான வேல. ராமமூர்த்தி, நடிகர்கள் விதார்த், விமல் உள்பட 100 திரை பிரபலங்கள் இப்பாடலை வெளியிட்டுள்ளனர்.