சென்னை: தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத்
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’, விஜய், பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க உள்ள ஒரு புதிய படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத். இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் சாம் சி.எஸ் உறுதி செய்துள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
தனுஷ் தற்போது ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.இப்படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். டான் பிக்சர்ஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறது. இப்படம் அக்.1 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.