பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிரதான வேடத்தில் நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஹெச்.ராஜா. பாஜக முன்னாள் காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், தற்போது அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். பல ஆண்டுகாலமாக அரசியலில் இருந்து வரும் ஹெச்.ராஜா தற்போது திரைப்பட நடிகராக களம் இறங்கியுள்ளார்.
அறிமுக இயக்குநர் வீரமுருகன் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஹெச்.ராஜா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்துக்கு ‘கந்தன்மலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் பின்னணியில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை சிவ பிரபாகரன் – சந்திரசேகர் தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன் காணப்படுகிறார். பாஜக ஆதரவாளர்கள் பலரும் இதனை தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஹெச்.ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.