பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ட்ரூப். ஏராளமான நாடகங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள இவர், பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1967-ம் ஆண்டு வெளியான ‘ஸ்டார் ட்ரெக்’, ‘மிஷன் இம்பாசிபிள்’ ஆகிய சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமான இவர், ‘தி டெவிஸ்’ஸ் பிரிகேட்’, ‘கெல்லிஸ் ஹீரோஸ்’, ‘சம்மர் ஸ்கூல்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அமெரிக்காவின் பிரேவர்லி ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்த இவர், வயது முதிர்வு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை காலமானார். அவருக்கு வயது 97. டாம் ட்ரூப் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். டாம் ட்ரூப் மனைவியும் நடிகையுமான கரோல் குக், கடந்த 2023-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார்.