பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி அட்லர் (96) காலமானார். ஹாலிவுட்டில் வெளியான மான்ஹாட்டன் மர்டர் மிஸ்டரி, த பப்ளிக் ஐ, இன் ஹர் ஷூஸ், த மெமரி தீஃப் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஜெர்ரி அட்லர்.
ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். நியூயார்க்கில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், காலமானார். இதை அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.