பிரபல ஹாலிவுட் நடிகர் கியானு ரீவ்ஸ் (61), பாயிண்ட் பிரேக், ஸ்பீட், த மாட்ரிக்ஸ், ஜான் விக், டாய் ஸ்டோரி 4 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஜெனிஃபர் சைம் என்பவரைக் காதலித்து வந்தார். 1999 ஆம் ஆண்டு இவர்கள் தங்கள் குழந்தையை இழந்தனர். பின்னர் 2001-ம் ஆண்டு ஒரு விபத்தில், 28 வயது ஜெனிஃபர் சைம் உயிரிழந்தார். இதனால் சோகத்திலிருந்த கியானு ரீவ்ஸ், மறு திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு அலெக்ஸாண்ட்ரா கிராண்ட் என்பவரைச் சந்தித்தார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பின்னர் காதலில் விழுந்தனர். 2019-ம் ஆண்டு அதை வெளிப்படையாக அறிவித்தனர்.இந்நிலையில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 52 வயதான அலெக்ஸாண்ட்ரா கிராண்ட், எழுத்தாளர். இவர்கள் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.