இப்படத்தில் பிரபாஸுக்கு அப்பா கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக சில தினங்களாக இணையத்தில் செய்திகள் உலா வந்தன. இதனை பேட்டியொன்றில் சந்தீப் ரெட்டி வாங்கா கேள்வியாக எழுப்பினர். அதற்கு அப்பா கதாபாத்திரம் மட்டுமல்ல, வேறு எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரஞ்சீவி நடிக்கவில்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
மேலும், டாங் லீ நடிப்பது குறித்து கேட்டதற்கு உறுதியும் படுத்தாமல், மறுப்பும் தெரிவிக்காமல் பதிலளித்துள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா. இதனால் பிரபாஸ் உடன் டாங் லீ நடிப்பது உறுதி என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அடுத்தாண்டு பிப்ரவரியில் ‘ஸ்பிரிட்’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த மாதம் இறுதியில் படப்பூஜை நடைபெறவுள்ளது. இதில் பிரபாஸுக்கு நாயகியாக திருப்தி டிம்ரி நடிக்கவுள்ளார்.

