‘வேட்டுவம்’ படத்தின் கதைக்களம் எப்படியிருக்கும் என்று பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டுவம்’. இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலும், இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. முதன்முறையாக இப்படம் குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் பா.ரஞ்சித்.
அதில் ‘வேட்டுவம்’ படம் குறித்து பா.இரஞ்சித், “வேட்டுவம் கதையினை ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக்க வேண்டும் என்று தான் எழுதினேன். இதில் என்ன சொல்லப் போகிறோம் என்று யோசித்தேன். நாம் ஏன் இக்கதையினை பண்ண வேண்டும் என்று சில கேள்விகள் எழுந்தது. அக்கதையில் அதிகார பகிர்வு தான் முக்கியமாக இருந்தது.
ஆகையால் அந்தக் கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வேறொரு உலகத்தில் அதனை சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். அந்த உலகம் பார்கையாளர்களுக்கு புதிதாக இருக்கும். ஒரு சயின்ஸ் பிக்சன் கலந்த எதிர்காலம் சார்ந்த கதையாக இருக்கும். பார்வையாளர்கள் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.