வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், “பிளாக் கோல்டு”.
தீரன் அருண்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை எம்எம் ஸ்டூடியோஸ் சார்பில் எம்.மூர்த்தி வழங்குகிறார். சந்தோஷ்குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கவாஸ்கர் அவினாஷ் இசை அமைத்துள்ளார். இதன் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
“நடுத்தர குடும்பத்து இளைஞனுக்கும் பெரிய வணிக மாபியாக்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சினையைச் சொல்லும் படம் இது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கதை உருவாகியுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது” என்றது படக்குழு.