வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் ப்ரோமோ வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் ப்ரோமோ இன்று (அக்டோபர் 4) வெளியாவதாக இருந்தது. இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் தாணு, “சிம்புவின் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க சிம்பு மற்றும் வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைதளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும். ஆகையால் சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே அந்த மாபெரும் முன்னோட்டம் வெளிவர உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏன் இந்த மாற்றம் என்றால், இன்னும் இதன் பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளைத் தொடங்கவில்லை. இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகி உள்ளார். அவருடைய பணிகளை முடித்து தணிக்கை செய்யப்பட்டு, அக்டோபர் 16-ம் தேதி இதன் ப்ரோமோவை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. அன்றைய தினம் அனிருத்தின் பிறந்த நாளாகும். அந்த ப்ரோமோ வீடியோ மூலம் இதற்கு அனிருத் தான் இசையமைப்பாளர் என்று அறிவிக்கவும் படக்குழு முடிவு செய்திருக்கிறது.
வெற்றிமாறன் – சிம்பு – அனிருத் மூவரும் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தின் கதை முழுக்க வடசென்னை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதில் சிம்புவுடன் நடிக்கவுள்ளவர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
சிம்புவின் ரசிகர்களின் அன்பு
வேண்டுகோளுக்கிணங்க
STR & வெற்றிமாறன்
படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும். ஆகையால் சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே…
— Kalaippuli S Thanu (@theVcreations) October 3, 2025