இந்திப் பட இயக்குநர் ஆனந்த். எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஜ்ன்னா’. இது 2013-ம் ஆண்டு வெளியானது. இதன் இரண்டாம் பாகமாக ‘தேரே இஸ்க் மே’ என்ற படம் இப்போது உருவாகி வருகிறது.
இதில் தனுஷ் ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. இதில் கீர்த்தி சனோனுடன் தனுஷ் ஸ்கூட்டரில் செல்லும் படப்பிடிப்புக் காட்சிகள் சில மாதங்களுக்கு முன் இணையத்தில் வெளியாயின.
இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து தனுஷின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் விமானப்படைக்கான உடையை நடிகர் தனுஷ் அணிந்துள்ளார். இதனால் அவர் விமானப்படை அதிகாரியாக நடிப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.