இசையமைப்பாளர் வித்யசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.
சமீபமாக லிங்குசாமி இயக்கத்தில் இசையமைப்பாளர் வித்யசாகரின் மகன் ஹர்ஷவர்தனின் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக விசாரித்த போது, உண்மையில் லிங்குசாமி இயக்கத்தில் ஹர்ஷவர்தன் அறிமுகமாகவில்லை என்கிறார்கள். அதற்கு முன்னதாகவே முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இயக்கும் படத்தில்தான் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார் ஹர்ஷவர்தன்.
அறிமுக இயக்குநரின் படத்தினை முடித்துவிட்டு, லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் ஹர்ஷவர்தன் படத்தினை அறிவிக்க முன்னணி தயாரிப்பு நிறுவனம் பணிபுரிந்து வருகிறது. இந்த அறிவிப்பு இந்த மாதத்துக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் வித்யசாகர். இவருடைய இசையில் வெளியான பல பாடல்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய மகன் ஹர்ஷவர்தன் இணையத்தில் மிகவும் பிரபலம். அப்பாவுடன் பல்வேறு கச்சேரிகளில் பாடி வருகிறார். இவர் தீவிரமான விஜய் ரசிகர். இவர் நடனமாடிக் கொண்டே பாடும் விஜய் பாடல்களின் வீடியோக்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது.