விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படம் ஜூலை 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 4-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் ‘கிங்டம்’. ஆனால் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இதற்கு பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் முடியாததே காரணம் என கூறப்பட்டது. தற்போது அதன் பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால், ஜூலை 31-ம் தேதி ‘கிங்டம்’ வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிங்டம்’. இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இதன் டீசர் மற்றும் பாடலுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வெளியீட்டு தேதி அறிவிப்புக்கும் சின்ன டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கவுதன் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிங்டம்’. நாக வம்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.