விஜய் சேதுபதி – பூரி ஜெகந்நாத் இணையும் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘ட்ரெயின்’ படத்தினைத் தொடர்ந்து பூரி ஜெகந்நாத் இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. இதனை பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. இதன் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி இருக்கிறது.
இதில் தபு, சம்யுக்தா, விஜய்குமார் உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதி உடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதன் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதன் கதையிலிருந்து ஒவ்வொரு விவரத்தையும் மிக நுணுக்கமாக வடிவமைத்து வருகிறார் பூரி ஜெகந்நாத். பான் இந்தியா படமாக பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராக உள்ளது.
பூரி ஜெகந்நாத் படத்தை முடித்துவிட்டு, தனது அடுத்த படத்தை இன்னும் அதிகாரபூர்வமாக முடிவு செய்யவில்லை. ஆனால், ‘மகாராஜா’ இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.