விஜய் இல்லாமல் எல்சியு படங்கள் இல்லை என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ என எல்சியு (லோகி சினிமாடிக் யுனிவர்ஸ்) படங்களை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதில் அடுத்ததாக ‘கைதி 2’, ‘விக்ரம் 2’, ‘ரோலக்ஸ்’ ஆகிய படங்களை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். ஆனால், விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் மீண்டும் படங்களில் நடிப்பாரா என்பது தான் பலருடைய கேள்வியாக இருக்கிறது.
இதனிடையே எல்சியு படங்களில் விஜய் நடிப்பது குறித்து லோகேஷ் கனகராஜ், “விஜய் இல்லாமல் எல்சியு படங்கள் இல்லை. ஆனால், மீண்டும் அதில் ஒரு பங்காக இருப்பாரா என்று தெரியவில்லை. இன்று அவருடைய கனவு எங்கு இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், எப்போதுமே அவர் இல்லாமல் எல்சியு நிறைவேறாது” என்று தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜின் இந்தப் பேச்சின் மூலம் விஜய்யின் கதாபாத்திரம் கண்டிப்பாக அடுத்டுத்த எல்சியு படங்களில் இடம்பெறும் என்பது உறுதியாகிறது. அவர் நடிக்கவில்லை என்றாலும், அவருடைய குரல் பதிவாவது இடம்பெறும் என்பது மட்டும் உறுதி.