விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகும் படத்துக்கு ‘பூக்கி’ என்று தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
தான் நடித்து வரும் படங்களை மட்டுமே தயாரித்து வந்தார் விஜய் ஆண்டனி. தற்போது அஜய் திஷன் நடிக்கும் படத்தினை தயாரித்து, இசையமைக்கிறார் விஜய் ஆண்டனி. இப்படத்துக்கு ‘பூக்கி’ என தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.
’பூக்கி’ படத்தினை அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கவுள்ளார். முழுக்க காதல் கலந்த காமெடி ஜானரில் இப்படம் உருவாகிறது. இன்றைய தலைமுறை தங்களுக்குள் செல்லமாக, கொஞ்சி அழைக்கும் வார்த்தையே ’பூக்கி’. அது கதைக்கு பொருத்தமாகவும் கதைக்குள்ளும் வருவதால் இப்படத்திற்கு ‘பூக்கி’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய 2K தலைமுறை காதலுக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதில்லை. ஆனால் காதலர்களே பிரச்சினையாக இருக்கிறார்கள். அப்படியான 2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சினைகளை மையமாக கொண்டே இப்படம் உருவாக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அஜய் திஷனுக்கு நாயகியாக தனுஷா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், Bigg Boss சத்யா, MJ ஸ்ரீராம், சுந்தரா டிராவல்ஸ் ராதா, அஷ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூருவில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
Here’s the First look of everyone’s favourite #Pookie
Tamil – Telugu
Shoot in progress | In cinemas 2026@vijayantonyfilm @GC_Begins @AJDhishan990 #Dhanusha @mrsvijayantony#vijayantony #vijayantonyfilmcorporation #ajaydhishan #love #romcom #PookieTheMovie pic.twitter.com/SBxFEAtoeA
— vijayantony (@vijayantony) September 2, 2025