பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், தமிழில் விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ரசிகை ஒருவர் ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்தை எழுதி வைத்ததாகச் செய்திகள் வெளியானது. இது போலியான செய்தி என்று கூறப்பட்ட நிலையில். இதுபற்றி சஞ்சய் தத்திடம் கேட்டபோது, அது உண்மைதான் என்றார்.
மும்பையை சேர்ந்த நிஷா பாட்டீல் (62) என்ற பெண், சஞ்சய் தத்தின் தீவிர ரசிகை. நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தான் இறந்த பிறகு ரூ.72 கோடி மதிப்புள்ள தனது சொத்துகளை சஞ்சய் தத்திடம் ஒப்படைக்குமாறு தனது வங்கிக்குத் தெரிவித்திருந்தார். அவர் இறந்த பிறகு வங்கியில் இருந்து சஞ்சய் தத்திடம் இதுகுறித்து கூறினர். அதை ஏற்க மறுத்த அவர், அந்தப் பெண்ணின் குடும்பத்துக்குத் திருப்பிக் கொடுத்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி யில் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.