உலகளாவிய வசூலில் 500 கோடி ரூபாயை எட்டியிருக்கிறது ‘கூலி’ திரைப்படம்.
ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. கலவையான விமர்சனங்களால் இப்படத்தின் 2-ம் நாள் வசூலே இறக்கம் கண்டு ஆச்சரியம் அளித்தது. இதனால் எதிர்பார்த்த வசூல் கிடைக்காமல் தடுமாறத் தொடங்கியது.
தற்போது இப்படம் உலகளாவிய வசூலில் 500 கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், 600 கோடி ரூபாயை எட்டுவதே கடினம் என்ற சூழல் தான் தற்போது நிலவுகிறது. தமிழகத்தில் ‘கூலி’ திரைப்படம் இறுதி பங்குத் தொகையாக ரூ.70 கோடி அளவுக்கே இருக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மேலும், தமிழகம் தவிர்த்து இதர மாநிலங்களிலும் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அனைத்து வெளிநாட்டு உரிமைகள் விற்பனையிலும் கண்டிப்பாக இப்படம் நஷ்டத்தைக் கொடுக்கும் என்பது உறுதி. ஏனென்றால் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி என்பதால் விநியோகஸ்தர்கள் பெரும் விலைக் கொடுத்து வாங்கினார்கள்.