‘சயாரா’ படத்தின் வசூல் ரூ.300 கோடியை கடந்திருக்கிறது. இது, பாலிவுட் வர்த்தக நிபுணர்களை வியப்படைய வைத்திருக்கிறது.
ஜூலை 18-ம் தேதி வெளியான இந்திப் படம் ‘சயாரா’. இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்துவருகிறது. தற்போது இதன் வசூல் ரூ.300 கோடியை கடந்து அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாளருக்கு பலமடங்கு லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளது.
மோகித் சூரி இயக்கத்தில் அகன் பாண்டே மற்றும் அனீத் படா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘சயாரா’. நாயகன் மற்றும் நாயகி இருவருமே இப்படத்தின் மூலமாக தான் அறிமுகமாகிறார்கள். இப்படத்தை யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன் நாயகன் மற்றும் நாயகி இருவருக்குமே பல்வேறு வாய்ப்புகள் குவியத் தொடங்கியிருக்கிறது.
அலியா பட், ஜோதிகா, மகேஷ் பாபு உள்ளிட்ட பலரும் இப்படக்குழுவினரை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர். இப்படம் முழுமையாக ஓடி முடியும்போது கண்டிப்பாக ரூ.400 கோடி வசூலை எட்டும் என்பதுதான் அனைவரின் கணிப்பாக இருக்கிறது. ‘சயாரா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைக் கொண்டாட சிங்கப்பூரில் பிரம்மாண்டமான விருந்து ஒன்றை படக்குழுவினர் தயார் செய்திருக்கிறார்கள்.