இந்தியாவில் ‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்திருக்கிறது.
மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை விளக்கும் வகையில், மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் 7 அனிமேஷன் படங்கள் உருவாக்கி வருகிறார்கள். இதில் முதல் படமாக ‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் ஜூலை 25-ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக இந்தி மற்றும் தெலுங்கில் இதனைக் கொண்டாடி வருகிறார்கள்.
மக்களிடையே கிடைத்த வரவேற்பால், இப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்திருக்கிறது. இந்தியாவில் அனிமேஷன் படங்களில் ரூ.100 கோடி வசூலை கடந்த முதல் படம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது ‘மகாவதார் நரசிம்மா’. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில், அடுத்த பாகத்தினை மேலும் நல்ல பொருட்செலவில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இதன் அடுத்த பாகங்களாக, ‘மகாவதார் பரசுராம்’ (2027), ’மகாவதார் ரகுநந்தன்’ (2029), ’மகாவதார் துவாரகாதீஷ்’ (2031), ’மகாவதார் கோகுல நந்தா’ (2033), ’மகாவதார் கல்கி பார்ட் ஒன்’ (2035), ’மகாவதார் கல்கி பார்ட் 2’ (2037) ஆகிய படங்கள் அடுத்தடுத்து உருவாகின்றன. இதனை ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.