மாதவன் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரன்’ திரைப்படம் மீண்டும் ரி-ரிலீஸ் ஆகவுள்ளது.
லிங்குசாமி – மாதவன் கூட்டணியில் வெளியான படம் ‘ரன்’. 2002-ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை புரிந்தது. இதன் பாடல்கள், வசனங்கள், காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என அனைத்துமே கொண்டாடப்பட்டது. ஏ.எம்.ரத்னம் இப்படத்தினை தயாரித்து வெளியிட்டார்.
தற்போது வரவேற்பைப் பெற்ற படங்கள், மீண்டும் வெளியிடப்பட்டு வெற்றி பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வரிசையில் ‘ரன்’ படமும் இணைந்திருக்கிறது. படத்தினை தற்போதைய தொழில்நுட்பத்துக்கு ஏற்றவகையில் மாற்றி வெளியிடவுள்ளார்கள். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மீரா ஜாஸ்மின், ரகுவரன், அதுல் குல்கர்னி, விவேக் உள்ளிட்ட பலர் மாதவனுடன் நடித்திருந்த படம் ‘ரன்’. இதற்கு ஒளிப்பதிவாளராக ஜீவா, இசையமைப்பாளராக வித்யாசாகர், எடிட்டராக வி.டி.விஜயன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர்.