ரஜினியுடனான சந்திப்பு குறித்து சிம்ரன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
‘டூரிஸ்ட் பேமிலி’ படம் பார்த்துவிட்டு படக்குழுவினரை அழைத்து பாராட்டினார் ரஜினி. அப்போது சிம்ரன் மும்பையில் இருந்ததால் அவர் ரஜினியை சந்திக்கவில்லை. தற்போது ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார் சிம்ரன். இது தொடர்பான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
ரஜினியுடனான சந்திப்பு குறித்து சிம்ரன், “சில சந்திப்புகள் காலத்துக்கு அப்பாற்ப்பட்டது. எங்கள் சூப்பர் ஸ்டாருடன் ஒரு அழகான தருணத்தை பகிர்ந்ததற்காக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ‘டூரிஸ்ட் பேமிலி’ மற்றும் ‘கூலி’ படத்தின் வெற்றிகள் இந்தச் சந்திப்பை இன்னும் சிறப்பானதாக மாற்றின” என்று தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்தில் ரஜினி – சிம்ரன் இணைந்து நடித்தனர். அதுவே இருவரும் இணைந்து நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் சிறிய கதாபாத்திரத்தில் தான் சிம்ரன் நடித்திருப்பார்.