
சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகோட்லா, மானஸா சவுத்ரி, கருணாகரன், புகழ், ஐஸ்வர்யா தத்தா, பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ள படம், ‘முஸ்தபா முஸ்தபா’. மாபோகோஸ் கம்பெனி சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ள இப்படத்தை பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார். எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இப்படத்துக்கு கே.எஸ்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி பிரவீன் சரவணன் கூறும்போது, “நண்பர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நகைச்சுவை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் இது. ஒரு எளிய பொய் எப்படி குழப்பமாக மாறுகிறது என்பதையும் சாதாரண மக்கள் பீதியடைந்து தங்கள் பிரச்சினைகளை சரி செய்ய போராடும் போது, அவை இன்னும் வேடிக்கையாகவும் குழப்பமாகவும் மாறும் போது ஏற்படும் விளைவுகளையும் இந்தப் படம் விவரிக்கும்” என்றார்.

