சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாகவும் ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா இணைந்து ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளனர். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரி 14-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
’பராசக்தி’ படத்தை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இதிலும் நாயகியாக நடிக்க ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணிபுரியவுள்ளார்.

